புனித இஞ்ஞாசியார் புனித இஞ்ஞாசியார்
slider slider slider slider slider

காலச்சுவடுகள்


இயேசு சபையினர்

16,090<

உலகில்

3,934

இந்தியாவில்

512

தமிழகத்தில்

இனிகோவின் வழியில்…
ஆழத்திற்குச் செல்ல…

திருப்பலி முன்னுரை:

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து இவ்வுலக புகழடைய வேண்டும் என ஆர்வம் கொண்ட இன்னாசியாரைக் கடவுள் போரில் அவரது காலை ஒடித்து ஆட்கொண்டார். ‘உன் காலை உடைத்தால்தான் நீ சரிப்பட்டுவருவாய’; என்றுரைத்த அவரது அண்ணியின் வார்த்தை மெய்ப்பட 1521-ஆம் ஆண்டு பாம்பிலோனாவில் குண்டடிபட்டு சாவின் விளிம்பிற்குச் சென்றார். உடல்நிலை தேறிவர ஒய்வெடுக்கும் வேளையில் புனிதர்களின் வாழ்வாலும் இயேசுவின் வார்த்தையாலும் ஈர்க்கப்பட்டார்.
தனிமையில் மன்ரேசா என்ற குகையில் ஆன்மிகப் பலம் பெற்றார். தான் பெற்ற அனுபவத்தையே ஆன்மிகப் பயிற்சியாகச் சாதாரணரும் பெறும் வண்ணம் தொகுத்தார். தனது இறையனுபவத்தைப் பகிர்ந்த ஒரு குழுவைத் திரட்டினார். இந்தக் குழுவே இயேசு சபையாக உருவெடுத்து திருச்சபையின் மீது ஏவப்பட்ட தாக்குதலுக்கு கேடயமாகவும் மறையுண்மைகளை மீட்டெடுக்கும் சாதனமாகவும் செயல்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் கால்வின் போன்றவர்களால் பல விதமான பிரச்சனைகளினாலும் சவால்களினாலும் திருச்சபை என்ற கப்பல் தத்தளித்த போது இறைநம்பிக்கையில் நங்கூரமிட்ட புனித லொயோலா இன்னாசியாரும் அவரது தோழர்களும் இந்தச் சேதாரத்தைக்கூட ஆதாரமாக்கி விசுவாசத்தை நிலைநாட்டினார்கள்.
பல புதிய முன்னெடுப்புகளையும் பணிகளையும் பயணங்களையும் துணிந்து மேற்கொண்டனர். இன்று நிலவும் அரசியல் குழப்பங்கள் ஆன்மிகத் தேடல்கள் இயற்கைச் சேதங்கள் ஈன வரிகள் உறவுப் பிரச்சனைகள் ஊடகக் குறுக்கீடுகள் எதிர்மறை சிந்தனைகள் ஏழையின் அங்கலாய்ப்புகள் நடுவில் வாழக்கூடிய மனிதனும் பல முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இனிகோவின் ஆன்மிகத்தில் செதுக்கப்பட்ட நாம் இறையருளால் தெளிந்து தேர்வுசெய்யவும் நமது பணியை விசுவாசத்தை ஆழத்திற்குத் தள்ளவும் இந்த திருப்பலியின் வழியாக மன்றாடுவோம்.

1. பரம்பொருளே இறைவா!

எமது திருச்சபையின் வழியாக உம்மையே நீர் வெளிப்படுத்துவதற்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர்கள் குருக்கள் துறவியர் மற்றும் அனைத்துப் பொதுநிலையினரும் தூய ஆவியின் வல்லமையால் அன்பிலும் அமைதியிலும் இரக்கத்திலும் ஈகையிலும் செழித்தோங்க வரமருள புனித இன்னாசியாரின் பரிந்துரையோடு இறiவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைப்பின் மூலமே இறைவா!

உமது சாயலிலே எங்களைப் படைத்து பகுத்தறிவைக் கொடுத்து இவ்வுலகைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் எங்களுக்குப் பொறுப்பளித்துள்ளீர். எஙகள் அன்றாட வாழ்வில் உமது துணையோடு நலம்பயக்கும் முடிவுகள் எடுக்கத் தேவையான மனப்பக்குவத்தைத் தர புனித இன்னாசியாரின் பரிந்துரையோடு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வாழ்வின் ஆதாரமே இறைவா!

இயேசுசபை மதுரை மாநிலத்தின் வழியாகத் தமிழகத்தில் அகயிருள் அகற்றும் கல்விப் பணியையும் சமூக விடுதலைக்கான சமூகப் பணியையும் முழு மானுட வாழ்வுக்கான ஆன்மிகப் பணியையும் ஆற்றி மக்களை நல்வழிப்படுத்துவதற்கு எங்களை கருவியாகப் பயன்படுத்துவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இனிகோவின் ஆன்மிகத்தால் எழுச்சிபெறும் நாங்கள் யாவரும் மேம்பட மேன்மேலும் சிரத்தையெடுத்து உழைத்திடத் தேவையான சக்தியைத் தந்தருள புனித இன்னாசியாரின் பரிந்துரையோடு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அழைப்பின் அச்சாணியே இறைவா!

உமது தலைசிறந்த படைப்பான மனிதர்கள் அமைதியில் வாழவும் உம்மை அறியவும் இறையாட்சியின் விழுமியங்களை மண்ணில் விதைக்கவும் ஆர்வம்கொண்ட இளைஞர்களைக்; குருக்களாகவும் சகோதரர்களாகவும் வாழ வளர பணியாற்ற தங்கள் வாழ்வின் பாதையைத் தெளிந்து தேர்வுசெய்ய உமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை இயேசு சபைக்கு அனுப்ப புனித இன்னாசியாரின் பரிந்துரையோடு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சிறு தகவல்கள்

 இந்தியாவில் இயேசுவின் திருஇருதய தூதராக விளங்கிய அருள்பணி பால் வெனிஷ் சே ச பலரின் இறையழைத்தலுக்கு காரணராவார்.

 புனித இஞ்ஞாசியாரின் எழுத்துக்களைப் படிக்கவே ஸ்பானிய மொழியை பயின்றதாக புரட்சியாளர் லெனின் பகிர்ந்துள்ளார்.

 தூத்துக்குடி மறைமாவட்டத்தில் முதல் ஆயர் ரோச் சே ச (1879-1955) முதல் இந்திய ஆயராவார்.

 அருள்பணி இக்னேஷியஸ் இருதயம் சே ச தமிழக திருச்சபையில் பல்சமய உரையாடலுக்கு வித்திட்டவர்.

 அண்மையில் இறையடியாராக உயர்த்தப்பெற்ற அகஸ்டின் பெரைரா சே ச (1854-1911) அமலோற்பவ கன்னியர் சபையின் நிறுவினர்.

 ஜூசெபே கஸ்லியோனே சே ச (1688-1766) என்ற அருள் சகோதரர் சினாவின் பாரம்பரிய ஓவியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.